செங்கல் சூளையில் லோடுமேன் தற்கொலையில் மர்மம் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க அனுமதி கோரி முற்றுகை சீர்காழி ஜிஹெச்சில் பரபரப்பு

சீர்காழி, ஏப்.19: சீர்காழி அருகே செங்கல் சூளையில் தற்கொலை செய்து கொண்ட லோடுமேன் பிரேத பரிசோதனையை வீடுயோ எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீர்காழி அருகே நிம்மேலி நடுத்தெரு சீனிவாசன் (40) என்ற லோடுமேன் நெப்பத்தூரில் உள்ள செங்கல் சூளையில் 17ம் தேதி காலை தகர கொட்டகையில் தூக்குப்போட்டு இறந்தார். இதையறிந்த உறவினர்கள் சீனிவாசன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி செங்கல் சூளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை எஸ்பி நாதா, சீர்காழி ஆர்டிஓ நாராயணன், சீர்காழி தாசில்தார் ஹரிதரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்ய வேண்டும், செங்கல் சோலையை மூடவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்டிஓ நாராயணன் செங்கல் சூளை மூடுவது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எஸ்பி  நாதா பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து சீனிவாசன் உடல் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மதியம் டாக்டர்கள் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய முற்பட்டபோது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் வி.சி.கட்சியினர், பிரேத பரிசோதனை செய்யும்போது இரண்டு வழக்கறிஞர்களையும், வீடியோ எடுக்கவும் அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தனர்.

இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் பிரேத வீடியோ எடுக்கவும் அனுமதிக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து முற்றுகைை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருவெண்காடு போலீசார் செங்கல் சூளை உரிமையாளர் சீர்காழி சுரேஷ்சந்த் (65), அவரது மகன் சித்தார்த் (35), மேலாளர் பரசலூர் மோகன்ராஜ் (61) ஆகிய 3 பேரையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: