நாகை, காரைக்கால் மாவட்டத்தில்

நாகை, ஏப்.19: நாகை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 153 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (17ம் தேதி) வரை 10 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (18ம் தேதி) 219பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 90பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 153பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9725 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 158 பேர் இறந்துள்ளனர். நேற்று 2 பேர் இறந்துள்ளனர். 1174 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 121 பேர் குணமடைந்துள்ளனர்.

காரைக்கால்:

கடந்த 17ம்தேதி 449 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் காரைக்காலில் 18 பேர், கோட்டுச்சேரி மற்றும் வரிச்சிக்குடி பகுதியில் தலா 13 பேர், திருப்பட்டினத்தில் 11பேர், திருநள்ளாறில் 9 பேர், கோவில்பத்து 5பேர், நெடுங்காடு 4 பேர், விழுதியூர், நல்லம்பல், அம்பகரத்தூரில் தலா 2 பேர், காரைக்கால் மேடு ஒருவர் என 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 5633 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 4803 பேர் குணமடைந்துள்ளனர். 740 பேர் சிகிச்சையிலும், தனிமைபடுத்தப்பட்டும் உள்ளனர். 2வது நாளாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால் அரசு மருத்துவ மனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 77 வயதான ஆண் ஒருவரும் 37 வயதான பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories:

More