வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது

திருப்பூர், ஏப். 19:  திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் ராம்பிரபு (24). இவர் கடந்த 14ம் தேதி சாமுண்டிபுரம் பகுதியில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்தார். 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, ராம்பிரபுவை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த சுரேஷ்(20) தமிழ்ச்செல்வன்(21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சாமுண்டிபுரத்தை சேர்ந்த சுண்டல்நாகராஜ் (40) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>