×

அதிகரிக்கும் கொரோனா தாக்கம் திருமண மண்டபம், கல்லூரிகளில் 450 படுக்கைகள் தயார்

திருப்பூர், ஏப். 18: திருப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் திருப்பூரில் கொரனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 தாண்டியது. இதனால் மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாமல் இப்பதால் மாற்று ஏற்பாடாக  மாவட்டம் முழுவதும் திருமண மண்டபங்கள், கல்லூரிகள் போன்றவைகளில் 450 பேர் சிகிச்சை பெறும் அளவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags :
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கொரோனா வார்டு