×

சாலையோர பூங்காக்களை பராமரித்திட கோரிக்கை

ஊட்டி,ஏப்.19: ஊட்டி நகரில் உள்ள ெபரும்பாலான நகராட்சி பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. அவற்றை பராமரிப்பு செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஊட்டி நகரம் வார்டு பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் தூய்மை பணிகள் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நகராட்சி சார்பில் சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை ஆரம்ப காலங்களில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இவற்றில் பெரும்பாலான பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஊட்டி உழவர் சந்தை அருகேயுள்ள சாலையோர பூங்கா, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா, ஏடிசி., பகுதியில் உள்ள பூங்கா, அரசு கலை கல்லூரி சாலையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகள் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன.
மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் நினைவு பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின் பெரிய அளவில் கண்காணிப்பு இல்லாத நிலையில் மீண்டும் அசுத்தமாக மாறி வருகிறது. இதே போல் ேசரிங்கிராஸ் பகுதியில் பெரியார் நினைவு திடல் உள்ளது. இதுவும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இப்பூங்காக்களை பராமரிப்பு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ஊட்டி நகரில் பொதுமக்கள் வந்து செல்ல கூடிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இவை பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. பூங்காக்களை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags :
× RELATED கொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு