தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்

ஊட்டி,ஏப்.19: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 3 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி நகராட்சியில் 75 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியாட்கள் உள்ளே செல்லாமல் இருக்க தகரம் கொண்டு மூடப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம், கொரோனா பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுவினர் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை, சளி மாதிரி சேகரிப்பு உள்ளிட்டவை மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

Related Stories:

>