×

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா

கோவை, ஏப். 19: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை என்பது புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதி தீவிரமாக இருந்தபோது ஒரே நாளில் 661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதான் அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக நேற்று 727 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 394-ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 608 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 108-ஆக உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் 4,579 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 707-ஆக உள்ளது.

Tags : Corona ,Coimbatore ,
× RELATED பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால்...