×

கொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு, ஏப். 19: கொரோனா விதிகளை மீறி இயக்கியதாக பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட 32 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், பஸ், வேன், ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பஸ்களில் நின்றபடி பயணிக்க கூடாது என அரசு உத்தரவிட்டது.

ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறி வாகனங்கள் தொடர்ந்து இயக்குவதால், தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து ‘தினகரன் நாளிதழில்’ கடந்த 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது’ குறிப்பிடத்தக்கது. இச்செய்தியின் எதிரொலியால், ஈரோடு கலெக்டர் கதிரவன் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறி இயக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்த உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவ லர்கள், போக்குவரத்து போலீசார் கடந்த 2 நாட்களாக ஈரோடு, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பஸ்கள், மினி பஸ்கள், தனியார் சேவை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில், பஸ், வேன், சரக்கு வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 32 வாகனங்களில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்கள் மீதும், வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...