×

மீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோடு, ஏப். 19: ஈரோட்டில் மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இறைச்சி, காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட் கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன்படி, 2வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மீன் மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாநகரில் உள்ள கோழி, ஆடு போன்ற அனைத்து இறைச்சி கடைகளிலும், வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிலும்  மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Tags : Fish Market ,
× RELATED சென்னை அமைந்தகரை காய்கறி, மீன்...