×

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்

காஞ்சிபுரம், ஏப்.19: வார விடுமுறையான நேற்று, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக தகுந்த இடைவெளி இன்றி, பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் சந்தைகள், கறிக் கடைகள் ஆகியவற்றி தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்ல, அசைவ பிரியர்கள் ஏராளமானோர் கூடுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள பொன்னேரிக்கரை மீன் சந்தையில் நேற்று ஏராளமான அசைவப் பிரியர்கள் திரண்டனர். அவர்கள், தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கிச் செல்ல ஒரே நேரத்தில் கூடினர்.

இதற்கிடையில், மீன் வியாபாரிகளும், பெருநகராட்சி ஊழியர்களும் பொதுமக்களுக்கு தேவையான கிருமிநாசினி, முகக் கவசங்கள் வழங்கினாலும், சந்தையின் உள்ளே மக்களிடையே தகுந்த இடைவெளியை கடைபிடிக்க பெரிதாக அறிவுறுத்துவதில்லை என கூறப்படுகிறது. தற்போது, மீன்பிடி தடைக்காலம் உள்ள நிலையில், மீன் வரத்து குறைந்து விலை அதிகமாக உள்ளது. இந்த சூழல் இருந்தபோதிலும், ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மீன் மார்க்கெட்டில் கூடியதால், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும்  கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Kansipuri Bonnaregri Fish Market ,
× RELATED வீட்டுக்குள் 10 அடி ஆழத்தில் திடீர்...