தாய், மகனுடன் திடீர் மாயம்

கும்மிடிப்பூண்டி, ஏப்.19: கவரப்பேட்டை சத்தியவேடு சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்(36). இவரது மனைவி ராஜேஸ்வரி(26), குழந்தை மித்ரன்(6). ராஜேஸ்வரி சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை  வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதற்கான பிஎப் பணம் பெறுவதற்காக நேற்று முன்தினம் காலை சென்னைக்கு சென்றார். அன்று மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த  முருகன் கவரப்பேட்டை காவல் நிலையத்தில்  புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>