ராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்

ராஜபாளையம், ஏப். 19: ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் கண்மாயில் தேங்கி இருக்கும் மழைநீர் திடீரென நிறம் மாறியதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய தவம் பெற்றநாயகி அம்மன் கோயில் எதிரே பெரியகுளம் கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி சாஸ்தா கோயில் அணைக்கட்டு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு மழைநீர் வந்து சேர்கிறது.கடந்த சில மாதங்களாக கண்மாய்க்கு வந்த மழைநீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென கண்மாயில் தேங்கியுள்ள மழைநீர் செம்மண் நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் உள்ள தண்ணீர் நிறம் மாறத் தொடங்கியுள்ளது. எனவே, உடனடியாக நிறமாற்றத்திற்கான காரணத்தை ஆராய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>