×

மனைவி மாயம்: கணவர் புகார்

ஆண்டிபட்டி, ஏப். 19: ஆண்டிப்பட்டி அருகே முதலக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (46). மனைவி ராஜாமணி (40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 23 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 15ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக மனைவி ராஜாமணி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீடு திரும்பாததால், அவரை அக்கம்பக்கம், உறவினர் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால்  கணவர் சக்திவேல் வைகை அணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை