105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்

தேவகோட்டை, ஏப்.19:  தேவகோட்டை அருகே பனங்கள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 105 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் போலீஸ் சரகம் பகுதிகளில் பனங்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஜெயமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பனங்கள் பதுக்கிய ஆலன்வயல் கிராமத்தை சேர்ந்த அந்தோணிச்சாமி(48), துதியனியை சேர்ந்த செபஸ்திகண்ணு(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 105 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>