×

வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்


சிங்கம்புணரி, ஏப்.19: வேட்டையன்பட்டியில் சேதமடைந்த சமுதாயக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி குடியிருப்பு பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.   வேட்டையன்பட்டி நடுநிலைப் பள்ளி அருகே உள்ள இந்த கட்டிடம்  பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் விசேஷங்கள் நடத்தவும், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் மண்டபங்கள் இல்லை. எனவே இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து மின்இணைப்பு, தண்ணீர் வசதி,  சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர்...