×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்

திருப்புவனம், ஏப்.19: திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் திருமால் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புவனம் கோட்டை யாதவர் தெருவில் உள்ள பாலகிருஷ்ண பெருமாள் கோயில் 123வது ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. விழாவின் நான்காம் திருநாளான நேற்று திருமால் அழகர் திருப்புவனம் முக்கிய வீதிகளில் உள்ள மண்டகப்படிகளில்  தங்கி அதிகாலை 5.30 மணியளவில்  பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் திருமால் அழகரை தரிசனம் செய்தனர். கிராமப் பொதுமக்களும் யாதவர் பண்பாட்டு கழகத்தினரும் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Thirumal Alhagar ,Chithirai festival ,
× RELATED சித்திரை திருவிழா கோலாகலம்...