×

சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டில் மக்கள்

சிங்கம்புணரி, ஏப்.19:  சிங்கம்புணரி அம்பேத்கர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் உள்ளது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை வழியாக பெரியார் நீட்டிப்பு கால்வாயை அடைகிறது. இதனால் சாலையோரங்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கொசுக்கடியால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தரும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர்...