×

டாஸ்மாக் கடையில் தகராறு ஒருவர் கைது, 2 பேர் ஓட்டம்

பரமக்குடி, ஏப்.19: பரமக்குடி அரசு மதுபான கடையில், இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஓருவர் கைது செய்யப்பட்டார். பரமக்குடி சந்தைக்கடை பகுதியைச் சேர்ந்த சந்துரு, இவரது நண்பர்கள் மணி, சதீஷ் ஆகியோர் உரப்புளி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்கு எதிரே உலகநாதபுரம் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், அவரது நண்பர் முனியசாமி ஆகியோர் மது அருந்தியுள்ளனர்.
அப்போது சந்துரு மதுபோதையில் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை எதிர்த்து கேட்ட செல்வத்தை, கம்பு மற்றும் கற்களால் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் மணி,சதீஷ் தாக்கியுள்ளனர். இது குறித்து, செல்வம் கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். தப்பி ஓடிய மணி, சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். சந்துருக்கு ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tasmac store ,
× RELATED பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே...