×

பரமக்குடியில்

பரமக்குடி, ஏப்.19: பரமக்குடியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பரவலாக பரவி வரும் கொ ரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பரமக்குடி காந்தி சிலை முன்பு, மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கம் சார்பில் முகக்கவசம் அணிவதன் அவசியம், கிருமி நாசினி பயன்படுத்துவது, கபசுர குடிநீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முகக்கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பரமக்குடி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் துவக்கி வைத்தார். நகராட்சியின் துப்புரவு பணி மேற்பார்வையாளர் வேலாயுதம், லிங்க மூர்த்தி, முருகேசன், திமுக பரமக்குடி நகர் செயலாளர் ஜீவரத்தினம், மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்களும், காவலர்களும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முகக்கவசம் போன்றவற்றை இலவசமாக வழங்கி கொரோனா விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர். ஏற்பாட்டை மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் முத்துக்குமார் செய்திருந்தார்.

Tags :
× RELATED ராமநாதபுரம், பரமக்குடி அரசு...