×

அய்யனார் கோயிலில் சித்திரை மாத பூஜை


கீழக்கரை, ஏப்.19: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சியில் உள்ள தட்சன் ஊரணி செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் சித்திரை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடிகளால் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண்கள் நெய் விளக்கேற்றியும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ayyanar Temple ,
× RELATED மேலூர் அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்