×

ரயில்வே ஸ்டேஷனுக்கு மாஸ்க் அணியாமல் வந்தவருக்கு அபராதம்


ராமநாதபுரம், ஏப்.19: கொரோ னா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து கிருமி நாசினி மூலம் கை கழுவிய பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.பயணிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. அதன்படி ராமநாதபுரம் ரயில் ஸ்டேஷன்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு தெற்கு ரயில்வே உத்தரவின்படி அபராதம் விதிக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.  ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர், ரயில் இயக்க அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ராமேஸ்வரம் ரயில் ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு