திருமங்கலம் பகுதியில் தானிய கழிவுகளுக்கு தீ வைப்பதால் பாதிக்கப்படும் சாலையோர

திருமங்கலம், ஏப்.19: திருமங்கலம் பகுதியில் தானிய கழிவுகளுக்கு தீ வைப்பதால், சாலையோர மரங்கள் கருகி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் துவரை, கம்பு, சோளம் ஆகியவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இவைகளை அறுவடை செய்து, உலர வைக்க தேவையான உலர்கலங்கள் இல்லாததால், கிராமப்புறச் சாலைகளில் போட்டு உலர வைக்கின்றனர். தானியங்கள், பயறுகளை பிரித்தெடுத்த பின், தானிய கழிவுகளை சாலையோரம் குவித்து தீ வைக்கின்றனர். இதனால், அருகில் உள்ள சாலையோர மரங்களில் தீப்பிடித்து கருகுகின்றன. குறிப்பாக சிவரக்கோட்டையிலிருந்து செங்கப்படை செல்லும் ரோடு, வில்லூரிலிருந்து செங்கப்படை செல்லும் ரோடு, கள்ளிக்குடி, குராயூர் ரோடு, சிவரக்கோட்டை எஸ்பி நத்தம் ரோடு, மேலக்கோட்டை காரியாபட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் துவரை கழிவு மார்களை எரியூட்டப்படும்போது சாலையோர நிழல்தரும் மரங்களும் கருகி வருகின்றன. இது தவிர திருமங்கலம்-விருதுநகர் நான்குவழிச்சாலை, திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வெயிலில் காய்ந்த செடிகளுக்கு தீ வைப்பதால் மரங்களும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை கண்காணித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஊராட்சி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமபகுதிகளில் சாலையில் உலரவைக்கப்படும் தானியங்களால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதனை தடுக்க கிராமந்தோறும் உலர்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: