காளான் வளர்ப்பு பயிற்சி

சோழவந்தான், ஏப். 19: சோழவந்தானை அடுத்த விக்கிரமங்கலம் அருகே உள்ள நத்தப்பட்டியில், உசிலம்பட்டி தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ‘காளான் வளர்ப்பு’ குறித்து பயிற்சி அளித்தனர். இதில், காளான் விதை உற்பத்தி, கொட்டகை அமைக்கும் முறை, நீர் தெளிக்கும் முறை, பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை, அறுவடை மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை குறித்து மாணவிகள், அமல் பிரிசில்லா, பிந்தியா, காயத்ரி, ஜான்சி பிரியா, ஷீரா விலாஷினி, பிரியதர்ஷினி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் செல்லம்பட்டி ஒன்றிய விவசாயிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More