பழநி அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

பழநி, ஏப்.19: பழநி அருகே மானூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  பழநி அருகே மானூரில் தீத்தொண்டு நாள் வார விழாவையொட்டி பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தல் மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஆண்டவராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முறைகள், புகை சூழ்ந்து சிக்கி மயக்கம் அடைந்தவரை மீட்கும் முறைகள், வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் முறை, சிலிண்டர் தீ விபத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தீ விபத்தில் காயமுற்ற நபரை மீட்கும் வழிகள், தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முறைகள், தீயணைப்பானின் வகைகள், தீயின் வகைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் கொடைக்கானல் தீயணைப்பு துறை சார்பில் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலர் அன்பழகன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள்  பயிற்சி அளித்தனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளையும், பணியாளர்களையும், எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றிய பயிற்சியை அளித்தனர். இந்த பயிற்சியில் கொடைக்கானல் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .

Related Stories:

More
>