பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

தூத்துக்குடி,ஏப்.19: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ராஜபாளையத்தில் அன்னை தெரசா நற்பணி மன்றம் சார்பில் கபசுர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இம்முகாமை தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்ஐ மகராஜா, டாக்டர் பெலிக்ஸ், மண்டல துணை வட்டார சுகாதார ஆய்வாளர் மாசானம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஊர் நிர்வாகிகள் லாரன்ஸ், கென்னடி, தமிழன் ரவி மற்றும் அன்னை தெரசா நற்பணி மன்ற தலைவர் தொம்மை அந்தோணி,  செயலாளர் விமல், பொருளாளர் ஜெயராம், அமைப்பாளர் பரலோக செல்வக்குமார், நிர்வாகிகள்

ஜெயசீலன், அந்தோணி வினோத், முத்துக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏரல்: ஏரலில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் தசரதபாண்டியன் தலைமை வகித்தார். ஏரல் போலீஸ் எஸ்.ஐ ராஜாமணி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஐ அமலோஷ்பவம், வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தர்மராஜ், செயலாளர் சுந்தர், ஆலோசகர் அருணாசலம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>