ஆனந்தவிளையில் அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர்

சாத்தான்குளம், ஏப்.19: ஆனந்தவிளையில் அபாய நிலையில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஆனந்தவிளையில் அப்பகுதி மக்களுக்கு மின் சப்ளை விநியோகிக்கும் பொருட்டு  நடுவக்குறிச்சி மின்வாரிய பராமரிப்பில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் குடியிருப்பு வீடுகள், கோயில் மற்றும் குடிநீர் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியும் உள்ளது. மேலும் அப்பகுதி சிறுவர்களும் இந்த டிரான்ஸ்பார்மர் பகுதியில் விளையாடி வருகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதில் உள்ள சிமென்ட் பூச்சு உதிர்ந்து அதன் கம்பங்கள் பலமிழந்து  எந்நேரத்திலும் விபத்து ஏற்படுத்தலாம் என நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மின் டிரான்ஸ்பார்மரால் விபத்து நிகழும் முன் அதனை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>