வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை

வைகுண்டம்,ஏப்.19:  வைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் இன்று(19ம் தேதி) பராமரிப்பு பணிக்காக  மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து வைகுண்டம் மின்வாரிய துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  வைகுண்டம் உபமின் நிலையத்தில் மின் தொடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அண்ணாநகர் தெரு  சந்தையடி தெரு, கோவில் பத்து தெரு, ஆனந்தவல்லி அம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, குருசுகோவில் மேலத்தெரு  ஆகிய  பகுதிகளில்  மின் தொடரில் பணி நடைபெறுவதால்   இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>