வி.கே.புரத்தில் திமுகவினர் கபசுர குடிநீர் வழங்கல்

வி.கே.புரம், ஏப்.19: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனின் வழிகாட்டுதலின்படி நேற்று காலை 6 மணி முதல் வி.கே.புரம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் கணேசன் தலைமையில் கொட்டாரம் சாலை, மெயின் ரோடு, அம்பலவாணபுரம், ஜார்ஜ்புரம் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர திமுக அவைத்தலைவர் அதியமான், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குட்டி கணேசன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்  பீட்டர் சுவாமிநாதன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்  பிரபாகரன்,தகவல் தொழில்நுட்ப அணி சங்கரநாராயணன், இளைஞரணி அமைப்பாளர் செல்வசுரேஷ் பெருமாள் மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>