திசையன்விளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி

திசையன்விளை, ஏப்.19: திசையன்விளை அருகேயுள்ள ரம்மதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி திலகராணி. இவர்களது மகள் செல்வம் எப்சிபா(9). அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் கடையில் ரஸ்னா வாங்கிவிட்டு வந்தார். அப்போது திடீரென மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து சிறுமியின் மீது விழுந்தது. இதில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே சிறுமியை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் திலகராணி கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

>