சேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

சேலம், ஏப்.19: சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 20ம் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 10ம் தேதி,சேலத்தில் இதுவரை இல்லாத அளவில் 109 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதையொட்டி சில நாட்கள் 107, 105 பாரன்ஹீட் வெப்பநிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. சேலத்தில் கடந்த 13 மற்றும் 14ம் தேதி மழை கொட்டியது. இம்மழையால் சேலத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 2 முதல் 3 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயில், நேற்று சேலம் மாவட்டத்தில் மிதமான வெப்பநிலை நீடித்தது. நேற்று முன்தினம் 99.9 பாரன்ஹீட் வெப்பநிலையும், நேற்று 100.1 பாரன்ஹீட்டும் பதிவானது. எதிர்வரும் நாட்களில் மழை நீடிக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்தால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படலாம். இல்லை என்றால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>