அரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்

திருச்செங்கோடு, ஏப்.19: எலச்சிபாளையம் அரசு பள்ளி முன், விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம், ராசிபுரம் மெயின்ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் சாலையை கடந்து பள்ளிக்கு வருகின்றனர். சிலர் சைக்கிள்களில் வருகின்றனர். சாலையில் வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதான சாலையை அகலப்படுத்தும் பணியின் போது, வேகத்தடையை அகற்றினர். சாலை பணி முடிந்த பின்னர், வேகத்தடை அமைக்காமல் விட்டதால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கும் முன், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>