பிளாஸ்டிக் கவர் பயன்பாடு

திருச்செங்கோடு, ஏப்.19: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமையில், துப்புரவு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர்கள் ஜான் ராஜா, பன்னீர்செல்வம் அடங்கிய குழுவினர் திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் கடைகளில்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகள் முன்பு கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டனர். முக கவசம் அணியாதவர்களிடம் ஆணையாளர் முக கவசத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதே போல் பஸ்களில் பயணிகள் மாஸ்க் அணிந்துள்ளனரா என ஆய்வு செய்து, மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிக்கர்களை பஸ்களில்  ஒட்டினார்.  இதனைத் தொடர்ந்து பழக்கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய காரணத்தால் ₹500 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

Related Stories: