நகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சந்திரா தலைமையில், நகராட்சி அலுவலர்கள் நகராட்சிக்குட்பட்ட சென்னை சாலை, காந்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுததிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ₹3 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் அடித்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். முகக்கசவம் அணியாதவர்களை கடைகளுக்குள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டனர். மேலும், சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். 

Related Stories: