ஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி

ஓசூர், ஏப்.19: ஓசூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். ஓசூர் அருகே, எம்எம் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 ஷிப்ட்டுகளாக பணிக்கு சென்று வருவதால், அங்குள்ள சாலையில் எப்போதும் போக்குவரத்து காணப்படுகிறது. ஆனால், அந்த சாலையோ குண்டும்- குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீர்செய்து சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>