அகரம் பிரிவு சாலையில் பேரிகார்டுகள் அமைப்பு

காரிமங்கலம், ஏப்.19: காரிமங்கலம் பைபாஸ் சாலையில் அகரம் பிரிவு ரோடு வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால், 4 வழி சாலையை கடக்கும் போது அவ்வழியே செல்லும் வாகனங்கள் மோதி ஏராளமானோர் காயம் அடைந்து வருகின்றனர். இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க காவல்துறை சார்பில், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் பேரிகார்டுகள் எடுக்கப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வந்தது. எனவே, மீண்டும் இப்பகுதியில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 17ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தர்மபுரி செல்லும் சாலையில், மீண்டும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இதேபோல் எதிர்ப்புறம் கிருஷ்ணகிரி சாலையிலும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>