திண்டல் ஊராட்சியில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

காரிமங்கலம், ஏப்.19:  காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. காரிமங்கலம் ஒன்றியம், திண்டல் ஊராட்சியில் நடந்து வரும் திட்ட பணிகளை, மாவட்ட திட்ட முகமை இயக்குனர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், சாலை பணிகள்,  ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், மணிவண்ணன், துணை பிடிஓ இந்துமதி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>