கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தர்மபுரி, ஏப்.19: கொரோ

னா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தி, தர்மபுரி நகரில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தர்மபுரி நகரில் மதிகோன்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், கொரோனா கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் நகரின் பல்வேறு இடங்களில், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தங்களது கைகளைக் கிருமி நாசினிக்கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தாலும், மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், தாமபுரி நகரில் சுகாதார அலுவலர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு ₹500ம், முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு ₹200வீதம் அபராதம் விதித்தனர்.

Related Stories:

>