அரூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான துவரை

அரூர், ஏப்.19: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் துவரை சாகுபடி செய்துள்ளனர். நிலக்கடலை, மஞ்சள் உள்ளிட்டவற்றில் ஊடு பயிராகவும் புன்செய் பயிராகவும் துவரை பயிரிடப்படுகிறது. 6 மாத கால பயிரான இது, தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மிதமான மழை, துவரைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக அமைந்ததால், விளைச்சல் நன்றாக உள்ளது. விளைச்சல் நன்றாக உள்ளதால், விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அறுவடை பணிகள் ஆண்டு தோறும் பிப்ரவரியில் இருந்து ஏப்ரல் மாதம் இறுதிவரை நடைபெறும் என விவசாயிகள் கூறினார்.

Related Stories: