வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி தொழிலாளியாக வேலை செய்பவர் சச்சின் (25). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த 3 பேர் சச்சினை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த செல்போன், பணத்தை பறிக்க முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 3 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த கணேஷ் (19), விக்னேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

More