×

ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி

வேளச்சேரி: கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (55). நேற்று மதியம் துணி துவைப்பதற்காக அலமேலு பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு சென்றார். துணிகளை துவைத்த பின்னர் ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் அலுமேலு வீட்டிற்கு வராததால் போஸ், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் துரைப்பாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தேடி அலமேலு சடலத்தை மீட்டனர்.

Tags :
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே...