×

கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

செய்யூர், ஏப். 18: தமிழகத்தில்  கொரோனா 2ம் அலை வேகமாக பரவும் நிலையில், தொற்று  பரவாமல் தடுக்க பல்வேறு  விதிமுறைகளை  தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. விதிகளை பின்பற்றாத  பொதுமக்களிடம்  அபராத தொகை வசூல் செய்யவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பல பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பலரிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர்  ஜான்லூயிஸ் உத்தரவின்பேரில், செய்யூர் வட்டம், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி தலைமையில் கடந்த 10ம் தேதி முதல் முககவசம் அணியாதாவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என  கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி மேற்கொண்டுள்ளனர்.

இதையொட்டி, சித்தாமூர் பஜார் பகுதியில் ஒவ்வொரு கடைகளாக சென்று  முககவசம் அணியாமலும், கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு சனிடைசர் முறையாக  வழங்காமல் இருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிகள் மீறினால்  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும், சாலையில் முககவசம் அணியாமல் செல்லும்  வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களுக்கு முககவசங்களை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுவரையில் பொதுமக்களிடம் இருந்து அபராத தொகையாக ₹11,600 வசூல் செய்யப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விதிகள் மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags :
× RELATED பள்ளி மாணவியை பலாத்காரம் போக்சோவில் மூன்று பேர் கைது