திருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

திருவள்ளூர், ஏப்.18: தமிழகத்தில் கொரோனா  இரண்டாம் அலை காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும்,  சுகாதாரத்துறை மற்றும் திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் வேண்டிய உதவிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. திருமழிசை பேரூராட்சியில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு பேரூராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர்.

மேலும், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில் பேரூராட்சி எல்லைக்குள் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், லாரிகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

Related Stories:

>