×

மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு 17 வயது சிறுமி புல்லாங்குழல் பயிற்சி வகுப்புக்கு சென்றபோது, புல்லாங்குழல் பயிற்சி ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இதை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.  அவர்கள், இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டப்பிரிவு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மயிலாப்பூர் மார்வாடி தோட்டம் ேகாரோனட் காஸ்டல் பகுதியை சேர்ந்த ராமானுஜம் (59) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், ராமானுஜம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதம் மற்றும் மிரட்டியதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்பேரில் குற்றவாளி ராமானுஜம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Mylapore ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது