×

87 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, ஏப். 18:  திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 67, கரூர் 2, நாமக்கல் 2 என மொத்தம் 71 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 71, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் 16 என மொத்தம் 87 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.திருவெறும்பூர். ஏப். 18:அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குருநாதன், விவசாய தொழிலாளர் சங்கம் செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்கமாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தெய்வ நீதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்தியஅரசு உடனடியாக உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சங்கிலி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சென்னை ஐஐடி வளாகத்தில் நோய் மற்றும்...