×

கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

திருச்சி, ஏப். 18: திருச்சி திருவானைக்காவல் பழைய கும்பகோணத்தான் சாலையில் உள்ள செங்கற்சூளை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரங்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த தினேஷ்(எ) இருட்டு தினேஷ்(25), மணி (எ) மணிகண்டன்(25) ஆகிய இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒன்னே முக்கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags : Rowdies ,
× RELATED தாம்பரத்தில் பரபரப்பு; கத்தியுடன்...