குடவாசல் ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி தீவிரம்

திருவாரூர், ஏப். 18: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வயல்களில் தண்ணீர் பாய்ச்சி, டிராக்டர் மூலம் உழவு செய்து, இயந்திர நடவிற்காக பாத்தி நாற்றாங் கால் மற்றும் வரிசை நடவு நாற் றாங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நிலத்தைப் பண்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தேவையான நெல் நாற்றுக்கள் விடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பி இருந் தாலும் சில இடங்களில் போர் வெல் மூலம் தண்ணீர் பெற்று கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, நீர் பாசனத்திற்கு தட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். உர விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். தேவையான உரம், பூச்சி மருந்துகளை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: