கொள்ைகக்கு எதிரானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்

மன்னார்குடி, ஏப்.18: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை : மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களை செயல்படுவதற்கு அனுமதித்தும், அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவு பணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி ஏப்ரல் 14, ஆகஸ்ட் 3 ஆடிப் பெருக்கு மற்றும் தைப்பூசம் ஜனவரி 18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப் படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 51A ( எச்) வலியுறுத்திக் கூறியுள்ள அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக உள்ளது. நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் எவ்விதத்திலும் அறிவியல் பூர்வமானது அல்ல. ஆகவே, அறிவியலுக்கும், அறிவியல் கண்ணோட்டத்திற்கும் துளியும் தொடர்பற்ற மங்கள நாள், அமங்கள நாள் என்ற நம்பிக்கைகளை அரசே ஊக்குவிக்கக் கூடாது. மங்களகரமான நாட்கள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மக்களின் நம்பிக்கைகளை பயன்படுத்தி அரசே சொந்த மக்களை சுரண்டுவதாக கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட சில நாட்களில் பத்திரப் பதிவுக்கு பெரும் கூட்ட நெரிசல் உருவாகவும், இதனால் பல மோசடிகள் உருவாகவும் அதன் வழி மக்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த அரசாணையை உடனே திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>