திருத்துறைப்பூண்டி நகரில் இரண்டு தெருக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை

திருத்துறைப்பூண்டி, ஏப்.18: திருத்துறைப்பூண்டி நகரில் சாமியப்பா நகர் ,பாரதியார் தெரு உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் ஏழு பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டதால் அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அடைக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது இந்த நிலையில் சாமியப்பா நகர் பகுதியில் மூன்று நபர்களுக்கும், பாரதியார் தெரு பகுதியில் நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நகராட்சி நிர்வாகம்அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து அடைத்து சீல் வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) செங்குட்டுவன் தெரிவித்தது; திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் தேவையின்றி அவசியமில்லாமல் நகரப்பகுதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு கண்டிப்பாக ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும்.

முககவசம், சனிடைசர் ,தனிநபர் இடைவெளி கடைபிடிக்காத வர்த்தக நிறுவன நிறுவனங்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும் வீடுகளில் இருக்கும்போதும் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சனிடைசர்அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அரசு வழிகாட்டுதலின்படி நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Related Stories: