தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தஞ்சை, ஏப்.18: தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று மூலம் 121 பேர் பாதிக்கப்பட்டனர். 188 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 1.084 பேர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மொத்தம் மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20.794 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தஞ்சையை சேர்ந்த 68 வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார். 282 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

Related Stories:

>