×

திருமயம் அருகே புலிவலத்தில் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருமயம்.ஏப்.18: நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் முதல் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதோடு விருப்பமுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முகாமில் பொதுமக்கள்கலந்து கொண்டு முதல் தடுப்பூசி போட்டு கொண்டனர்.பின்னர் கிராமத்தில் உள்ள45 வயதிற்கு மேற்பட்ட 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி முகாம் ஏற்பாடுகளை புலிவலம் பஞ்சாயத்து, விராச்சிலை ஆரம்ப சுகாதார மையம் செய்திருந்தது.Tags : Pulivalam ,Thirumayam ,
× RELATED கொரோனா பாதித்தவர்களை சித்த...